பெரிய “மால்” வேலைக்காகுமா?

April 5, 2010

நேத்து “ஸ்டார் பஜார்” போயி ஏதாவது வாங்கலாம்னு போனா , (என்ன வாங்கறதுன்னு தெரியாமத்தானே நிறையப்பேரு போறாங்க) ஒண்ணு கூட வாங்கத்தோணல. ஏன்னு கேட்குறீங்களா? . என்னோட அளவுக்கு XXL டீ-சட்டை கேட்டா அந்த மாதிரியெல்லாம் விக்கறது இல்லன்கறான். “ஒன்லி small, medium , large” அடங்க அப்ப பெரும்பாலான இந்தியனோட கதி (நான் urban இந்தியன சொன்னேங்க) , சரி போவட்டம்னு மளிகை சாமானெல்லாம் வாங்கலாம்னு பாத்தா , நம்மள கண்டுக்கறதுக்கு ஆளையே காணோம்.  ஒருத்தன புடிச்சு பருப்பு, சீரகம், கடுகு எங்கப்பான்னு கேட்டா எல்லாம் அவனோட (ஸ்டார்) பிராண்டு சொந்த பொட்டலம் , நம்ம அயிட்டம் உதயம் , ஆச்சியைக்காணோம், இதேதான் சமையல் எண்ணெய்க்கும் , வந்ததுக்கு பசங்க சாக்லெட் கொஞ்சம் வாங்கிச்சுங்க. அத தவிர ஜூஸ் மெஷின்னு 558 ( பாரிஸ் கார்னர்ல 220)! ஒரு பொட்டி போடற மெஷின்னு அது இதுன்னு 985 ஆயிடுச்சு . கடைசியா நொந்து போயி கீயுவுல ரொம்ப நெரம் நின்னு பில்லு போட்டு ஆயிர ரூவா நோட்ட நீட்டுனா , சில்லர கொடுன்னு கேக்குறா, அடிங்க ஒக்கா மக்கானு அவள ஒரு பாட்டு விட்டு பில்லு கேட்டா தூக்கி போட்டா பாருங்க , மனுசங்க எங்க நிக்கறாங்கன்னு தெரியாம. கோவம் தலைக்கி ஏறிடுச்சு… இனிமே இந்த மாதிரி மனுசங்கல மதிக்க தெரியாத கடைக்கு வரக்கூடாதுன்னு தீர்மானமா முடிவுபண்ணிட்டு கிளம்பினேன்.

அடுத்த நாளாவது திருந்தனும் இல்ல, பிக பஜார் போனா , அங்க நுழையும்போதே பார்த்தேன் , பெரிய கியு பில் போட. சும்மா அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வெளியே வந்தாச்சு.

இந்த இரண்டு கடை அனுபவத்திலிருந்து ஒண்ணு நல்லா தெரியுது “மதியாதார் வாசலை மிதியாதேன்னு” ஒரு பயலும் நம்மள கண்டுக்க மாட்டங்கறான். கடை மட்டும் பெரிசா இருக்கு , சலுகை என்கிற பேர்ல வருச முழுக்க சலுகைதான். இத வச்சி எவ்வளவு நாள் மக்கள ஏமாத்துவாங்கன்னு தெரியல. மனுசன , மனுசன மதிச்சா நல்லாயிருக்கும். வழக்கம் போல நம்ம அண்ணாச்சி கடைக்கு போன நல்ல கவனிப்பு இருக்கும் , அத விட்டுட்டு, இந்த பியாணி, டாடா, பிர்லா, அம்பானி இவங்களுக்கெல்லாம் நம்மல கண்டுக்க நேரம் இருக்குமா!

Made for Indian roads!

மார்ச் 8, 2010

இத கண்டிப்பா நீங்க  ஒரு கார் விளம்பரத்தில படிச்சிருக்கலாம். என்ன கொடுமை சரவணா இது,  நம்ம ரோட்டு மானத்த இப்படி கூர் போட்டு விளம்பரபடுத்தி அவமானப்படுத்தும்போது நம் நிலையை கண்டு கூனிக்குருகி போகவேண்டியிருக்கு. முதல்ல நம்ம ரோடு இப்ப கொஞ்சம் நல்லாவே தேறலாம். என்ன சொல்றீங்க!

அக்க போறால்ல இருக்கு!

மார்ச் 5, 2010

என்னய்யா நடக்குது உலகத்துல , தாங்க முடியாமதான் இந்த வலைப்பூ


Follow

Get every new post delivered to your Inbox.